×

காவல் நிலையத்தில் பட்டப்பகல் களேபரம் புகார் கொடுக்க வந்த பெண்கள் முன்பாக இன்பம் கண்ட இன்ஸ்.: வைரலான வீடியோ; அதிரடி டிஸ்மிஸ்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு வந்த பெண்கள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியாவில் உள்ள பாட்னி காவல் நிலையத்தின் ஆய்வாளர் பிசிம் பால் சிங். கடந்த 22ம் தேதி நில தகராறு தொடர்பாக தாயும், மகளும் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் வந்தனர். அவர்கள் பால் சிங்கை சந்தித்து புகாரை கொடுத்தனர். அவரை எதிரே அமர வைத்து விசாரித்த பால் சிங், திடீரென பாலியல் ரீதியாக மிகவும் மோசமாக நடந்து கொள்ள தொடங்கினார்.  

அந்த பெண்கள் முன்னிலையில் அவர் சுயஇன்பம் செய்தார். இதை பார்த்து அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்த போதிலும், அந்த பெண்மணியின் மகள் ரகசியமாக பால் சிங்கின் செயலை செல்போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, பால் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனங்கள் வலுத்தன. இதனால், பால் சிங் தலைமறைவானர். அவரை பிடிக்க துப்பு கொடுத்தால், ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை அறிவித்தது. இந்நிலையில் பால் சிங் மறைந்திருந்த இடத்தை போலீசார் நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காக அவர் பணி நீக்கமும் செய்யப்பட்டார்.

Tags : women ,Inns ,police station , In the police station, graduation day, kalebaram complaint, inns in front of women
× RELATED சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி...